வரலாற்றில் இன்று..,
1453 – ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
1660 – இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.
1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1864 – மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான்.
1886 – வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.1919 – ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
1953 – முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.1982 – இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.1988 – அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் முதற்தடவையாக சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் செய்தார்.
1990 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.