1,00,00,000 பேர் பலி இவ்வாண்டில் மட்டும்..!! அதிர்ச்சி தகவல்.
உலகளவில் இவ்வாண்டு சுமார் 10 மில்லியன் பேர் புற்றுநோய்க்குப் பலியாவார்கள் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
நோயைத் தடுக்க, மேம்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன; முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதியும் அதிகம் உள்ளன; இருப்பினும், அனைத்துலக அளவில் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவ்வாண்டு உலகெங்கும் சுமார் 18.1 மில்லியன் புதிய புற்றுநோய்ச் சம்பவங்கள் பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. நோயால்,
சுமார் 9.6 மில்லியன் பேர் மரணமடைவர் என்றும் கூறப்படுகிறது. புற்றுநோய்கான அனைத்துலக ஆய்வு அமைப்பு அதனைத் தெரிவித்தது.
6 ஆண்டுகளுக்கு முன்னர் அமைப்பு செய்த மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் அது அதிகம். அப்போது 14.1 மில்லியன் புதிய புற்றுநோய்ச் சம்பவங்களும் 8.2 மில்லியன் மரணங்களும் பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டது.
மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் நாடுகளில் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை ஆகியவைப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயரக் காரணம் என்று அமைப்பு சொன்னது.
அதே சமயம், புகைபிடிப்பதைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன; ஆரோக்கியம், உடற்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இவற்றால், சிலவகைப் புற்றுநோய் பாதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதாகவும் அமைப்பு தெரிவித்தது.
DINASUVADU