வரலாற்றில் இன்று…!!
நவம்பர் 28 (NOVEMBER 28) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு.
நிகழ்வுகள்
1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
1729 – மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.
1821 – பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
1843 – ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
1893 – நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
1905 – ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
1912 – அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1918 – புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.
1942 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491 பேர் இறந்தார்கள்.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.
1958 – சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
1960 – மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
1975 – கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1979 – நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.
dinasuvadu.com