வரலாற்றில் இன்று!
பிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ்
பிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் ஓர் ஆங்கிலேய உயிர்வேதியியல் அறிஞர். உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தவர் இவரே. இதற்காக 1929 ஆம் ஆண்டு இவருக்கு உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது 1930 முதல் 1935 ஆம் ஆண்டு வரை இவர் வேந்திய கழகத்தின் தலைவராக இருந்தார்.இவர் ஜூன் 20ம் தேதி 1861ம் ஆண்டு பிறந்தார்.
சிலோன் சின்னையா
சின்னையா இலங்கையின் மலையகத்தில் கண்டி, அம்பிட்டிய என்ற ஊரில் செல்லக்கண்ணு, காவேரி ஆகியோருக்குப் பிறந்தார். தனது பத்தாவது வயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1968 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியான நிர்மலா என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். பின்னர் மஞ்சள் குங்குமம் (1970) திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். 1972 இல் வெளியான மீனவப் பெண் திரைப்படத்தில் மருத்துவராகத் தோன்றி நடித்தார்.