ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்
ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் ஸ்காட்டியக் கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவரது முக்கியமான சாதனை மின்காந்தவியல் கோட்பாடு ஆகும். மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார். மக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கின. இதனைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முன்னைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்கள் ஆயின. மின்காந்தவியலில் மக்ஸ்வெல்லின் பணி இயற்பியலில் இரண்டாவது பெரிய ஒன்றிணைப்பு எனப்படுகின்றது. இவர் 1831ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பிறந்தார்.
பான் கி மூன்
பான் கி மூன் ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளராவார். ஏழாவது பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி 1, 2007 முதல் இவர் அப்பொறுப்பை ஏற்றார். இவர் ஜூன் 13, 1944அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர். பொதுச் செயலாளர் பதவிக்கு வரும்முன் தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் பதவி 2016 ஆம் ஆண்டு திசம்பர் 31 இல் நிறைவுற்றது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…