வரலாற்றில் இன்று..ஷில்பா ஷெட்டி!
ஷில்பா ஷெட்டி
இவர் 1975ம் ஆண்டு ஜூன் 8 அன்று பிறந்தார். ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். பாஜிகர் (1993) திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து அவர் 40 திரைப்படங்களை நெருங்கிவிட்டார். 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக் திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் அவர் நடித்தார். ஷில்பா தனது நடிப்புத் தொழிலில் இருந்து பலமுறை புறக்கணிக்கப்பட்டாலும் தன் திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்தார். தத்கன் மற்றும் ரிஷ்தே ஆகிய திரைப்படங்களில் அவருடைய பாத்திரங்கள் பாராட்டப்பட்டன. பிர் மிலேங்கே திரைப்படத்தில் அவர் எயிட்ஸ் நோயாளியாக நடித்ததற்காக பல விருதுகளைப் பெற்றார். அவரது இளைய சகோதரி ஷமிதா ஷெட்டியும் ஒரு பாலிவுட் திரைப்பட நடிகை ஆவார்.
பிராங்க் லாய்டு ரைட்
இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர் பிராங்க் லாய்டு ரைட் ஆவார். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராகத் திகழ்கிறார் . இவர் உருவாக்கிய ஃபாலிங்வாட்டர் (1935) கட்டிடமானது தற்போது வரை அமெரிக்க கட்டிடகலையின் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாக அறியப்படுகிறது. இவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தார்.பிராங்க் லாயிட் ரைட் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவ்ருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன.அதில் நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண்குழந்தைகள் ஆவர்.இவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கொன்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் நகரமொன்றில் 1867 ம் ஆண்டு ஜூன் 8ம் நாள் பிறந்தார்.
சேர் அருணாசலம் மகாதேவா
சேர் அருணாசலம் மகாதேவாஎன்பவர் இலங்கையின்புகழ் பெற்ற சட்டவாக்க நிபுணரும், தூதுவரும் ஆவார். இவர் இலங்கை அரசாங்க சபையில் உட்துறை அமைச்சராகவும் 1948 முதல் 1950 வரை இந்தியாவுக்கான இலங்கைத் தூதராகவும் பணியாற்றியவர்.இவர் 1969 ம் ஆண்டு ஜூன் 8(இன்று) இயற்கை எய்தினார்.