வரலாற்றில் இன்று!! வேலுப்பிள்ளை பிரபாகரன்..,
1955ஆம் ஆண்டு – உலக சாதனை ஜோடி:
1955ஆம்ஆண்டுஆஸ்திரேலியாமற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாஅணி முதல் இனிங்ஸில் 668 ரன்களை எடுத்தது. அதன் பின் களமிறங்கியமேற்கிந்திய தீவுகள் அணி 147 ரன்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து சற்றுதடுமாறியது. அப்பொது ஜோடி சேர்ந்த மேற்கிந்திய தீவுகள்அணியின் தலைவர் டெனிஸ் எட்கின்சன் மற்றும் விக்கட் கீப்பர் டெபெசா ஆகியோர்7ஆவது விக்கட்டுக்காக 347 ஓட்டங்களை சேர்ந்து எடுத்தனர். இது டெஸ்ட் கிரிக்கட்வரலாற்றில் 7ஆவது விக்கட்டுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ரன்களாகும் . இது இடம்பெற்று தற்போது வரை 61 வருடங்கள் கடந்தும் இந்தசாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17] அல்லது மே 18[ இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமி] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள்ழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில்அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.