Categories: வரலாறு

வரலாற்றில் இன்று !! விடுதலை போராட்ட வீரர் கக்கன் …

Published by
Dinasuvadu desk

தமிழக அரசியல்வாதி கக்கன்

கக்கன்  விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் கக்கன் ஒரு வழக்கறிஞர் ஆவர்.Image result for கக்கன்

கக்கன் ஜூன் 18, 1908-ம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை படித்தார்.

கக்கன் தனது பள்ளி மாணவப் பருவத்திலேயே கங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார்.  அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோவில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோவில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததின் விளைவாக தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோவில்களில் நூழைய தடைசெய்யபட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது.

கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். காமராஜர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். 1957-ல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது.

கக்கன் பொதுப்பணித்துறை, அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957-ல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் மதராசு மகாணத்தில் துவக்கப்பட்டன. இவர் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago