வரலாற்றில் இன்று! லாலு பிரசாத் யாதவ்..
லாலு பிரசாத் யாதவ்:
லாலு பிரசாத் யாதவ் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.இவர் 1947ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பிறந்தார்.
இவர் பீகாரின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். இவர் மீது எதிர்கட்சிகள் பல்வேறு குற்றங்களை சுமத்தினாலும் பீகார் மக்கள் இவரை ஹீரோவாக தான் பார்க்கிறார்கள்
சுகுமாரன்:
சுகுமாரன் ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். விற்பனை பிரதிநிதி, மொழி பெயர்ப்பாளர், பத்திரிக்கையாளர் , தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் என்று பல்வேறு பணிகளில் செயல்படுபவர் சுகுமாரன்.இவர் 1957ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பிறந்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற சுகுமாரன் அடூர் கோபாலகிருஷ்ணனின் சினிமா பற்றிய புத்தகமொன்றை (சினிமா அனுபவம்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.’காலச்சுவடு’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.