வரலாற்றில் இன்று தான் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் முதன் முறையாக அரங்கேறிய தினம்…!!
வரலாற்றில் இன்று ஜனவரி 29, 1595 ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் முதன் முறையாக அரங்கேறிய தினம். உலகின் தலைசிறந்த காதல் காவியங்களுள் ஒன்று ரோமியோ ஜூலியட். இத்தாலிய பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாடகத்தை வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதினார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அதிகம் பார்க்கப்பட்ட நாடகம் இதுவே ஆகும்! சோகமான முடிவைக் கொண்டுள்ள இந்த காதல் கதை உலகின் பல்வேறு மாற்றப்பட்டு திரைப்படங்களாகவும், குறும்படங்களாகவும் வெளிவந்துள்ளது.இந்த நாடகத்தை எழுதி முடிக்க ஷேக்ஸ்பியருக்கு 5 ஆண்டுகள் பிடித்துள்ளதாக கருதப்படுகிறது. இந்நாடகத்தின் முதற் காட்சி லண்டன் நகரில் சேம்பர்லின் பிரபுவுக்கு சொந்தமான கூரை வேயப்பட்ட அரங்கத்தில் நடை பெற்றது. ரோமியோ வாக நடித்தவர் 25 வயதான ரிச்சர்ட். ஜுலியட் ஆக நடித்தவர் 14 வயதான மாஸ்டர் ராபர்ட் (ஆண்) அக்காலத்தில் பெண் வேடங்களையும் ஆண்களே ஏற்று நடித்தார்கள். அரங்கம் நிறைந்த முதற்காட்சியைக் கண்டவர்கள் 500 பேர்.