வரலாற்றில் இன்று! டைட்டானிக் கப்பல்..,

Default Image

டைட்டானிக் கப்பல்:Related image

ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முழுவதுமாக மூழ்கியது.டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த டைட்டானிக் கப்பல் 1911ம் ஆண்டு மே 31ம் நாள் வெள்ளோட்டம் விடப்பட்டது.

 

வால்ட் விட்மன்

Image result for வால்ட் விட்மன்இவர் ஒரு அமெரிக்கக் கவிஞர், இதழாளர் மற்றும் கட்டுரையாளர். கடந்தநிலைவாதம் (transcendentalism) மற்றும் யதார்த்தவாதம் (realism) ஆகிய இரு இலக்கிய இயக்கங்களின் கூறுகளையும் இவரது படைப்புகளில் காணலாம். விட்மன் அமெரிக்க கவிதையுலகின் பெரும் புள்ளிகளில் ஒருவர். அமெரிக்க புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.இவர் மே 31,1819ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நெடுந்தீவில் (long island) பிறந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்