வரலாற்றில் இன்று – டிசம்பர் 28 நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது…!
வரலாற்றில் இன்று – டிசம்பர் 28, 2007 – நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. நேபாள ஜனநாயக இயக்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக, மன்னர் ஞானேந்திரா நேபாள நாட்டின் முடியாட்சியை துறந்து, நேபாள நாட்டின் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்தார். முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் 24 ஏப்ரல் 2006இல் மீண்டும் செயல்படத் துவங்கியது. 18 மே 2006இல் நேபாள நாடாளுமன்றம் கூடி, மன்னரின் அனைத்து அதிகாரங்களை பறித்து, நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. 28 டிசம்பர் 2007 அன்று நேபாள அரசியல் சட்டத்தின் பிரிவு 159இல் திருத்தம் மேற்கொண்டு, நேபாள நாட்டை, கூட்டுக் குடியரசு நாடாக அறிவித்து, முடியாட்சி முடிவுக்கு வந்தது.