வரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1898 – ரேடியம் (Radium) கியூரி தம்பதியினரால் கண்டுபிடிக்கப்பட்டது
வரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1898 – ரேடியம் (Radium) கண்டுபிடிக்கப்பட்டது ரேடியம் என்பது ஒளிரும் கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். போலந்து நாட்டை சேர்ந்த பிரஞ்சு பெண்ணான மேரி கியூரி, அவரது கணவர், பியரிக் கியூரி [Marie & Pierre Curie] இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று பிட்ச்பிளன்டி தாதுவைத் தொடர்ந்து சோதித்தார்கள். அப்போதுதான் யுரேனியத்தை விடப் பல மடங்கு உக்கிரம் கொண்ட கதிர்களை வெளியாக்கும் ரேடியம் [Radium] என்னும் புதிய மூலகத்தைக் [Element] கண்டு பிடித்தார்கள்.
இவ்வரிய கண்டு பிடிப்புக்காக, மேரி கியூரி, பியரி கியூரி, இருவருக்கும்இயற்பியல் விஞ்ஞானத்திற்கு 1903 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது .
source: dinasuvadu.com