வரலாற்றில் இன்று – ஜனவரி 9, 1951- ஐநா தலைமையகம் நியூயார்க்கில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது…!!
வரலாற்றில் இன்று – ஜனவரி 9, 1951- ஐநா தலைமையகம் நியூயார்க்கில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள்சபையின் இந்தத் தலைமையகக் கட்டடம் 1949, 1950 ஆம் ஆண்டுகளில், ஜோன் டி, ராக்பெல்லர் ஜூனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது. இது மான்ஹட்டனின் கிழக்குப் பகுதியில், டர்ட்டில் பே (Turtle Bay) வட்டகையில், ஈஸ்ட் ஆற்றை நோக்கியிருக்கும் பரந்த நிலத்தில் அமைந்துள்ளது. இக் கட்டிடத்தொகுதி அமைந்துள்ள இடம் நியூயார்க் நகரத்தில் இருந்தாலும், இந்த இடம் ஒரு அனைத்துலக ஆட்சிப் பகுதியாகும்.. அமெரிக்காவுக்கு (USA ) சொந்தமானதல்ல !