வரலாற்றில் இன்று ஜனவரி-2ல் உலகின் முதலாவது செயற்கைக்கோள், லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது
வரலாற்றில் இன்று ஜனவரி 2 1959 – உலகின் முதலாவது செயற்கைக்கோள், லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வு செய்ய ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. லூனா 1 விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் விடுபடு திசைவேகத்தைத் (escape velocity) தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். ஜனவரி 3 இல் பூமியில் இருந்து 113,000 கி.மீ. தூரத்தில் இக்கலத்தில் இருந்து மிகப் பெரிய (1 கிலோ கிராம்) சோடியம் வாயுக்கலவை ஒன்று வெளியேறியதில் இக்கலம் ஒரு செயற்கை வால்வெள்ளி (comet) போலத் தோற்றமளித்தது. மிகவும் பிரகாசமான இவ்வாயுக்கலவை இந்து சமுத்திரத்திற்கு மேலாகத் தெரிந்தது. லூனா 1 சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 5995 கிமீ தூரத்துக்குள் ஜனவரி 4 ல் எட்டியது.