வரலாற்றில் இன்று – ஜனவரி 10, 1966 – தாஸ்கண்ட் உடன்படிக்கை போடப்பட்டது…!!
வரலாற்றில் இன்று – ஜனவரி 10, 1966 – தாஸ்கண்ட் உடன்படிக்கை. காஷ்மீர் பிரச்சினை காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையில் 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஐ.நா. தலையீடு காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருநாடுகளுக்கும் இடையில் சோவியத் யூனியன் சமாதான முயற்சிகள் மேற்கொண்டது. இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அயூப் கான் இருவரும் சோவியத் யூனியனை சேர்ந்த உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஸ்கண்டில் சோவியத் யூனியன் தலைவர் அலெக்சி கோசிஜின் முன்னிலையில் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி ஒரு சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். அதுவே தாஸ்கண்ட் உடன்படிக்கை ஆகும்/ இந்த உடன்படிக்கையின்படி இந்தியா பாகிஸ்தான் இருநாட்டுப் படைகளும் 1949 ஆம் ஆண்டு சண்டை நிறுத்தத்தின் பொது இருந்த வரையறைக் கோட்டுக்கு வெளியே தத்தம் படைகளை நிறுத்திக் கொள்வது என்று முடிவாகியது.