ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டின் 114 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 115 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1704 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது.
1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1877 – ஓட்டோமான் பேரரசு மீது ரஷ்யா போரை அறிவித்தது.
1908 – லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
1913 – வானளாவிக் கோபுரம் வூல்வேர்த் கோபுரம் நியூயார்க் நகரில் கட்டப்பட்டது.
1915 – ஆர்மீனிய இனப்படுகொலை: கொன்ஸ்டன்டீனபோலில் பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏனையோர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
1955 – இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவெறி, மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1961 – 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “வாசா” என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.
1965 – டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1967 – சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1968 – மொரீசியஸ் ஐநாவின் உறுப்பு நாடாகியது..
1970 – முதல் சீனச் செய்மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்பட்டது.
1970 – காம்பியா பொதுநலவாய அமைப்பினுள் குடியரசாகியது.
1981 – முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமானது.
1990 – டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1993 – இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.
1993 – லண்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
2006 – நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
2007 – பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
பிறப்புகள்
1581 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (இ. 1660)
1820 – ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908)
1880 – கிடியொன் சண்டுபெக்கு, சுவீடிய-அமெரிக்கப் பொறியாளர், பல்லிணைவுப் பட்டிகை தயாரித்தவர் (இ. 1954)
1889 – ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (இ. 1952)
1929 – ராஜ்குமார், இந்திய நடிகர் (இ. 2006)
1934 – ஜெயகாந்தன், இந்திய எழுத்தாளர் (இ. 2015)
1941 – ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்க ஊடகவியலாளர், தூதுவர் (இ. 2010)
1941 – ஜான் வில்லியம்சு, அமெரிக்க இசைக்கலைஞர்
1947 – ரோஜர் கோர்ன்பெர்க், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1951 – தம்பிஐயா தேவதாஸ், ஈழத்து எழுத்தாளர்
1973 – சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாளர்
1987 – வருண் தவான், இந்திய நடிகர்
இறப்புகள்
1622 – சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (பி. 1577)
1731 – டானியல் டீஃபோ, ஆங்கிலேய உளவாளி, ஊடகவியலாளர் (பி. 1660)
1960 – மேக்ஸ் வோன் உலோ, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1879)
1967 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விமானி, விண்வெளிவீரர் (பி. 1927)
1976 – மார்க் டோபே, அமெரிக்க ஓவியர் (பி. 1890)
2011 – சத்திய சாயி பாபா, தென்னிந்திய ஆன்மிக குரு (பி. 1926)
சிறப்பு நாள்
காம்பியா – குடியரசு நாள் (1970)
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…