வரலாற்றில் இன்று இந்தியாவின் 18-வது மாநிலமாக அறிவிக்கப்பட்ட இமாசலப் பிரதேசம்…!!
வரலாற்றில் இன்று 1971-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 1950-ஆம் ஆண்டு முதல் யூனியன் பிரதேசமாக இருந்து வந்தது. அதற்கு முன்னர் இது பஞ்சாப் மாநிலத்தின் பகுதியாக இருந்தது. இமயமலை பகுதியில் அமைந்துள்ளதால் மலை மற்றும் மலை சார்ந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவில் அதிகளவு தனிநபர் வருவாய் உள்ள மாநிலங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. நீர் மின்சக்தி உற்பத்தி, சுற்றுலா, விவசாயம் ஆகியவை மாநிலத்தின் முக்கிய வருவாய் இனங்களாக உள்ளன. எழில் கொஞ்சும் இயற்கை அழகு மிகுந்த இம்மாநிலத்தின் தலைநகரம் சிம்லா ஆகும்.