வரலாற்றில் இன்று ..! அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்த நாள்..!

Default Image

ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1124 – முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.Related image
1296 – இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான்.Image result for first edward king
1521 – நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
1522 – மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.
1565 – பிலிப்பீன்சின் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நாடு சேபு (Cebu) அமைக்கப்பட்டது.
1667 – பார்வையற்ற ஜோன் மில்ட்டன் தான் எழுதிய பரடைஸ் லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.
1813 – 1812 போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க்கை கைப்பற்றினர்.
1840 – லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது.
1865 – 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.Image result for ship accident in suldana
1904 – அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்தது.
1909 – துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.Image result for turkey sultan
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்கத் தலைநகர் ஏத்தன்ஸ் நகரை அடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: கடைசி நாசி ஜெர்மன் படைகள் பின்லாந்தில் இருந்து வெளியேறினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாசிக் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான வோல்கிஷெர் பியோபாக்டர் நிறுத்தப்பட்டது.
1959 – மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.
1960 – பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐநாவின் நேரடி ஆட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.
1961 – சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1967 – கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸோ 67 கண்காட்சி ஆரம்பமானது.Image result for 1984 strike in america
1974 – அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக வாஷிங்டன் டிசியில் 10,000ற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.
1978 – இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.
1981 – Xerox PARC முதன் முறையாக கணனி mouse ஐ அறிமுகப்படுத்தியது.Image result for first mouse for computer
1992 – சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1993 – காபோனில் இடம்பெற்ற விமான விபத்தில் காம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1994 – தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
2001 – தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
2002 – நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.
2007 – எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செம்படையின் நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.

பிறப்புகள்

1723 – பிலிப்பு தெ மெல்லோ, கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர் (இ. 1790)
1852 – சர் பி. தியாகராய செட்டி, திராவிட அரசியல் தலைவர் (இ. 1925)Image result for சர் பி. தியாகராய செட்டி
1902 – கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (இ. 1965)Image result for கந்தமுருகேசனார்
1912 – சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)Image result for சோரா சேகல்
1942 – வலேரி பொல்யாக்கொவ், ரஷ்ய விண்வெளி வீரர்Image result for வலேரி பொல்யாக்கொவ்
1945 – பிரபஞ்சன், தமிழ் எழுத்தாளர், விமர்சகர்Image result for பிரபஞ்சன்

இறப்புகள்

1521 – பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கேய மாலுமி (பி. 1480)Image result for பிரபஞ்சன்
2015 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)Image result for க. அருணாசலம்

சிறப்பு நாள்

சியேரா லியோனி – விடுதலை நாள் (1961)
டோகோ – விடுதலை நாள் (1960)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்