Categories: வரலாறு

தினச்சுவடு…!!

Published by
Dinasuvadu desk

நவம்பர் 8 (November 8) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு.

நிகழ்வுகள்

1520 – டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1811 – இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
1889 – மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.
1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.
1923 – மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
1938 – பாரிஸ் நகரில் ஜெர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.
1939 – மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1942 – மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.
1950 – கொரியப் போர்: ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.
1965 – பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
1977 – கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1987 – வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2006 – பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1656 – எட்மண்ட் ஹேலி, பிரித்தானிய வானியல் ஆராய்ச்சியாளர் (இ. 1742)
1680 – வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742)
1893 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (இ: [[1964])
1900 – ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர், (இ. 1976)
1902 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், (இ. 1977)
1923 – ஜாக் கில்பி, அமெரிக்க மின்னியல் பொறியாளர், (இ. 2005)
1927 – லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி
1984 – நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1958 – சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1878)
2000 – சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (பி. 1912)
2014 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!

நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…

4 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

7 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

8 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

9 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

9 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

10 hours ago