"சுப்பிரமணியன் என்ற சுப்பையா பாரதியார்" தொடக்க கால வாழ்க்கை…

Default Image


இன்று சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் : 

சுப்பிரமணியன் , சுப்பையா என்று அழைக்கப்பட்ட சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதியார் சின்னசாமி  ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11ஆம் தேதி  1882ஆம் ஆண்டு  தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில்  உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம் )  எட்டயபுரத்தில் பிறந்தார்.1887ஆம் ஆண்டு அவரின் தாயார் இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.


பாரதியார் தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போதே தன்னுடைய  கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897ஆம் ஆண்டு 
பாரதியார் செல்லம்மாள் என்பவரை  மணந்தார்.
பாரதியாருக்கு 1898ஆம் ஆண்டு  தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.

பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898ஆம் ஆண்டு  முதல் 1902ஆம் ஆண்டு வரை
பாரதியார் அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்ட
பாரதியார் எட்டயபுர அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார்.

பாரதியார் 1904ஆம் ஆண்டு  மதுரையில் எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.பாரதியார் தமிழ், ஆங்கிலம் , இந்தி , சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர் பாரதியார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்