காந்தியும் கடம்பவனமும்,உங்களுக்கு தெரியுமா???..!!!
இன்று நமது தேச பிதா காந்தி மகானின் பிறந்த தினம்….!
இன்றைய தலைமுறையினர் தங்களின் அபிமான நடிகர்களின் திரைப்படங்களை காண்பதற்கு இரவு முழுவதும் கண்விழித்து, போலீசிடம் அடி வாங்கி,தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தி பண்டிகையாக கொண்டாடும் இளைய சமுதாயம் மாகத்மா காந்தியின் பிறந்த தினத்தை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?
இளம் தலைமுறையினரை பொருத்தவரையில் இன்று விடுமுறை தினம். வீட்டில் உள்ளவர்களுக்கோ டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சி பார்க்கும் தினம். பெரும்பாலான தமிழர்களுக்கு மதுக்கடை, இறைச்சிக்கடை அடைப்பு தினம். பதுக்கல் வியாபாரிகளுக்கு ப்ளாக்கில் வைத்து மதுப்புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்க்கும் தினம். பொதுவாக அனைவருக்கும் இதுவும் கடந்து போகும் ஒரு தினம் என்றே கருதுகின்றனர்.
ஆனால், உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை முன்மதிரியாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல நாட்டில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக மாகாத்மா காந்தி திகழ்ந்து வருகிறார். ரத்தம் சிந்தாமல் போராட்டம் நடத்தி, மக்களின் ஒற்றுமையின் மூலமும், அமைதியான போராட்டங்கள் மூலமும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த முடியும் என்ற வித்தையை கற்று கொடுத்தவர் காந்தி.நெருப்பை நெருப்பைக்கொண்டு அனைக்கமுடியாது,நெருப்பை நீரைக்கொண்டுதன் அனைக்கமுடியும் என்பது காந்தியின் கொள்கை.
இத்தகய கொள்கைகள் உடயவர்களை எங்கே காண முடியும் என்கிறீர்களா? இருக்கிறார்கள், அது நம் மதுரையில்தான்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் அமைந்திருக்கும் காந்தி அருங்காட்சியகத்தில்தான் அப்பழுக்கற்ற காந்திய சிந்தனையாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களே பல பல காந்திய தொண்டர்களை உருவாக்கி வருகிறார்கள். காந்திய சிந்தனை கல்வியையும், அவர் காட்டிய பொருளாதார கல்வியையும் கற்று தருகிறார்கள். நோயற்ற, கவலையற்ற எளிய வாழ்க்கையை கற்று தருகிறார்கள். இதற்கு இவர்களுக்கு குடையாக இருப்பது காந்தி நினைவு அருங்காட்சியகம்.
சமீபத்தில் சேலத்தில் துணிக்கடை திறக்க வந்த திரைப்பட நடிகை நயன்தாராவை காண குழுமிய கூட்டம் தள்ளுமுள்ளு ஆனதில் பலருக்கு போலீசின் லத்தியடி பரிசாக கிடைத்தது. அதைவிட மதுரையில் புலி படம் தாமதமாக ரீலிசானதால் தகாராறில் இறங்கிய இளைஞர்கள் போலீஸ் தடியடியை பெற்ற சம்பவம், காந்தி அருங்காட்சியகத்துக்கு அருகிலுள்ள திரையரங்கில்தான் நடந்தது.
இன்று மகாத்மா காந்தியின் பிறந்த தினம்….!
அபிமான நடிகர்களின் திரைப்படங்களை காண்பதற்கு இரவு முழுவதும் கண்விழித்து, போலீசிடம் அடி வாங்கி, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தி பண்டிகையாக கொண்டாடும் இளைய சமுதாயம் மாகத்மா காந்தியின் பிறந்த தினத்தை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?
இளம் தலைமுறையினரை பொருத்தவரையில் இன்று விடுமுறை தினம். வீட்டில் உள்ளவர்களுக்கோ டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சி பார்க்கும் தினம். பெரும்பாலான தமிழர்களுக்கு மதுக்கடை, இறைச்சிக்கடை அடைப்பு தினம். பதுக்கல் வியாபாரிகளுக்கு ப்ளாக்கில் வைத்து மதுப்புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்க்கும் தினம். பொதுவாக அனைவருக்கும் இதுவும் கடந்து போகும் ஒரு தினம்.
ஆனால், உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல நாட்டில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக மாகாத்மா காந்தி திகழ்ந்து வருகிறார். ரத்தம் சிந்தாமல் போராட்டம் நடத்தி, மக்களின் ஒற்றுமையின் மூலமும், அமைதியான போராட்டங்கள் மூலமும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த முடியும் என்ற வித்தையை கற்று கொடுத்தவர் காந்தி.
இந்த பரபரப்பான உலகில் காந்தியின் கொள்கையை பின்பற்றி எளிய வாழ்க்கை வாழ்கிறவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? காந்தியை போலவே வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கை என்று வாழ்கிறவர்கள் நம்முடன் இருக்கிறார்கள். சின்ன உதவி செய்துவிட்டு பெரிய விளம்பரங்களை தேடிக்கொள்கிறவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சிலர் இருப்பது ஆச்சரியமானதுதான்.
இவர்களை எங்கே காண முடியும் என்கிறீர்களா? நம் மதுரையில்தான்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் அமைந்திருக்கும் காந்தி அருங்காட்சியகத்தில்தான் அப்பழுக்கற்ற காந்திய சிந்தனையாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களே பல பல காந்திய தொண்டர்களை உருவாக்கி வருகிறார்கள். காந்திய சிந்தனை கல்வியையும், அவர் காட்டிய பொருளாதார கல்வியையும் கற்று தருகிறார்கள். நோயற்ற, கவலையற்ற எளிய வாழ்க்கையை கற்று தருகிறார்கள். இதற்கு இவர்களுக்கு குடையாக இருப்பது காந்தி நினைவு அருங்காட்சியகம். சென்று வாருங்கள் ,கண்டு மகிழுங்கள்.