இன்றைய சுவடுகள்..!!
நிகழ்வுகள்
829 – தியோஃபிலோஸ் (813-842) தனது தந்தையை தொடர்ந்து பைசாந்தியப் பேரரசர் ஆனார்.
1187 – 88 ஆண்டுகள் சிலுவைப் போரின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாதீன் ஜெருசலேமைக் கைப்பற்றினான்.
1263 – நோர்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக் கண்டுபிடித்தார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படையினர் வேர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
1870 – ரோம் மீண்டும் இத்தாலியுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
1903 – யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான “SS Jaffna” என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
1935 – இத்தாலி அபிசீனியாவைக் கைப்பற்றியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1946 – பல்கேரியா கம்யூனிஸ்டுகளின் வசமாகியது.
1958 – கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1968 – மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின் முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1990 – சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 132 பேர் கொல்லப்பட்டனர்.
1992 – பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
1996 – பெருவில் விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – நியூயோர்க்கில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1800 – நாட் டர்னர், அமெரிக்க அடிமைக் கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)
1869 – மகாத்மா காந்தி, (இ. 1948)
1904 – லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர், (இ. 1966)
1908 – டி. வி. இராமசுப்பையர், தினமலர் நாளிதழின் நிறுவனர் (இ. 1984)
1925 – ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்
1965 – டொம் மூடி ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1906 – ராஜா ரவி வர்மா, இந்தியாவின் பிரபல ஓவியர் (பி. 1848)
1975 – காமராஜர், இந்திய அரசியல் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1903)
2014 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)
சிறப்பு நாள்
இந்தியா – காந்தி ஜெயந்தி
கினி – விடுதலை நாள் (1958)
அனைத்துலக வன்முறையற்ற நாள்
DINASUVADU