,

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மீது அவரது தந்தை குற்றச்சாட்டு..!

By

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா அந்த அணியின் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார், ஐபிஎல் கிரிக்கெட்டின் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள அவர் உலகக் கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார்.

ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜடேஜா மற்றும் ரிவபா இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.  திருமணத்திற்கு பிறகு பாஜகவில் இணைந்த ரிவாபா ஜடேஜா, குஜராத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தற்போது ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் ஜடேஜா செய்தியாளர்களிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,  “நாங்கள் தற்போது ஜடேஜா மற்றும் அவரது மனைவியுடன் தொடர்பில் இல்லை எனவும் திருமணம் ஆன இரண்டு மூன்று மாதத்திற்குள் ரிவபா ஜடேஜா அனைத்தையும் அவரது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கி விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, “ ஜடேஜா ஜாம் நகரில் ஒரு பங்களாவில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஒரே ஊரில் இருந்தும் பார்த்து கொள்வதில்லை எனவும் குறிப்பிட்டார். 5 வருடங்கள் ஆகியும் எனது பேத்தியை பார்க்க முடியவில்லை,  ஜடேஜாவிற்கு திருமணம் செய்து வைத்திருக்கவே கூடாது, அவருக்கு திருமணம் ஆகாமலே இருந்திருக்கலாம், அவர் கிரிக்கெட்டர் ஆகாமலே இருந்திருக்கலாம் இவை எல்லாம் நடக்காமலே இருந்திருந்தால் நாங்கள் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டோம்” என வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து விளக்கமளித்த ரவீந்திர ஜடேஜா, “எனது அப்பா அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியது உண்மை இல்லை, எனது மனைவியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இந்த பேட்டியை கண்டிக்கிறேன். எனது தரப்பில் நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் பொது வெளியில் நான் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன். இது முழுக்க முழுக்க போய் ஆகும்” என்று தனது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Dinasuvadu Media @2023