வலிமை திரைப்படத்தின் உண்மை வசூல் என்ன..? முழு விவரம் இதோ.!

வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது வருகிறது. அந்த வகையில், வெளியான முதல் வாரத்தில் வலிமை திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, வலிமை திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் தமிழகத்தில் ரூ. 105 கோடிக்கும், இந்தியாவில்- ரூ. 122 கோடியும், மொத்தமாக உலகம் முழுவதும் முதல் வார முடிவில் படம் ரூ. 165 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஹூமா குரேசி, யோகி பாபு, கார்த்திகேயா, புகழ், சுஜிதா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் யுவன் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.