4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

heavy rain

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புறநகர் ரயில் :

சென்னையில் திடீரென பெய்த கனமழையால் இரவு 7 மணி முதல் புறநகர் ரயில் சேவை தாமதமாக இயக்கப்படுகின்றன. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் புறநகர் ரயில்கள் பொதுவாக இயக்கப்படுகின்றன.

பள்ளிகள் விடுமுறை:

சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube

உங்களுக்காக