என்னை சென்ட் ஆப் செய்து விட்டார்களா.? குழப்பத்தில் சரவணன் மீனாட்சி ரச்சிதா.?

நடிகை ரச்சிதா சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோயினாக நடித்துவருகிறார். சமீபத்தில் அந்த தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் அவருக்கு 1000 எபிசோடுகளை கடந்து தொடர்ந்து நடித்துவருவதற்காக ‘ஸ்பெஷல் டெடிகேஷன் விருது’ கொடுக்கப்பட்டது.

இது பற்றி பேசிய ரச்சிதா “சரவணன் மீனாட்சியால் நான் பல பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் விஷயங்களை சந்தித்துள்ளேன். இரண்டு வருடங்கள் பெஸ்ட் நடிகை என விருது கொடுத்தார்கள். ஆனால் இந்த வருடம் இத்தனை வருஷம் நடித்ததற்கு ஒரு விருது என கொடுத்துவிட்டார்கள். என்னை சென்ட் ஆப் செய்து அனுப்புவது போல எனக்கு தோன்றியது” என கூறியுள்ளார்.

மேலும் இந்த சீரியலை நானாக விட்டு செல்ல மாட்டேன், அவர்களாக முடிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment