ஹாப்பி நியூஸ் : வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இந்திய நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது.

சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. இதனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2177.50-லிருந்து ரூ.2,141 ஆக குறைந்துள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,068.50 ஆக நீடிக்கிறது.

author avatar
Castro Murugan

Leave a Comment