ஞானவாபி மசூதி; தடயவியல் பரிசோதனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

ஞானவாபி மசூதி; தடயவியல் பரிசோதனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

supreme court

கார்பன் பரிசோதனை செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் (கார்பன்) பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஞானவாபி மசூதி வளாகத்தில் லிங்க வடிவிலான பொருளின் காலத்தை கண்டுபிடிக்க, தடயவியல் சோதனைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் அல்லது நீரூற்று போன்ற வடிவத்தை அறிவியல் தடையவியல் (scientific survey) பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இதுதொடர்பான இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு வீடியோ கிராஃபிக் கணக்கெடுப்பின் போது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் “சிவ்லிங்கத்தின்” கார்பன் டேட்டிங் உட்பட “அறிவியல் பரிசோதனைக்கு” இடைக்கால விதித்தது உச்ச நீதிமன்றம்.

Join our channel google news Youtube