தமிழின் அருமையை அறிந்த GOOGLE!

By

முதலில் கூகுள் வரைபடத்தில் ஆங்கிலம் மொழி மட்டுதான் தேடல் மொழியாக இயங்கி வந்தது. ஆனால் இப்போது புதிய செயல்படுகளுடன்,தமிழ் மொழி பயன்பாட்டாளர்களையும் உணர்வையும்,எண்ணத்தையும் கருத்தில் கொண்டு செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்துள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக தமிழ் மொழியின் தனிச்சிறப்பையும்,தொண்மை தன்மையும்  புரிந்து
கொண்டு தான் தமிழ் மொழியை கூகிள் நிறுவனம் தங்களது கூகுள் வரைபட செயலியில் தேடல் மொழியாக இணைத்து கொண்டுவந்துள்ளது.இதனால் உலக தமிழர்கள் அனைவரும் தங்களது தாய்மொழியின் மூலமே தங்களது இருப்பிடங்களை எளிமையாக முறையில் தேடிக்கொள்ளலாம்.

ஏனெனில் தமிழ் மொழிதான் உலகின் மிக பழமையான மொழிகளில் முதன்மையானது. இலக்கிய, இலக்கணங்களில் இம்மொழிக்கு நிகர் இவ்வுலகில் எம்மொழியும் இல்லை.

ஆகவே கூகுள் நிறுவனத்திற்கு உலகத்தமிழர்களின் சார்பாக நாங்களும் எங்களுடைய தினச்சுவடு நாளிதழ் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். 

Dinasuvadu Media @2023