குட் நியூஸ்.! தமிழகத்தில் இன்று 987 பேர் டிஸ்சார்ஜ்.!

 இன்று ஒரே நாளில் மட்டும்  தமிழகத்தில் கிட்டத்தட்ட 987  பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதித்தோரின் எண்ணிக்கை  13191 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ள நிலையில், 59 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில்,  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட 987  பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது.

 

 

author avatar
Dinasuvadu desk