ஜியோ புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது…!!

ஜியோ புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது…!!

Default Image

ஜியோ நிறுவனம் தன்னுடைய புதிய வகையிலான மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது.

மும்பையில் நடைப்பெற்ற ஜியோ நிறுவனத்தின் 41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழு கூட்டத்தில் புதிய படைப்பு ஜியோ மொபைல் போன்-2 அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய சிறிய ரக ஜியோ போன் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு புதிய அம்சங்கள் நிறைந்த ஜியோ போன் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மொபைல் போன்களில் கூகுள் மேப்,வாட்ஸ் ஆப் போன்ற புதிய வசதிகள் உள்ளது.

இதன் விலை 2,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய ஜியோ போனை கொடுத்து புதிய போனை பெற்றுக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போனின் சிறப்பு அம்சங்கள் கவனித்தால் 2.4 இஞ்ச் அளவில் QVGA டிஸ்பிளே,512 MB ரேம்,4GB மெமரி ஸ்டோரெஜ்,128 GB அளவிற்கு அதிகப்படுத்திக்கொள்ளும் MicroSD கார்டு வசதி,2MP பின்புற கேமரா,VGA கொண்ட முன்பக்க கேமரா, 2000 mAh திறன் பேட்டரி போன்ற திறன்களை கொண்டுள்ளது.

ஏற்கனவே மொபைல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் சேவையில் வழங்கி அசைக்க முடியாத நிறுவனமாக வலம் வரும் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது மொபைல் போன்களின் உற்பத்தியிலும் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube