அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!

அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!

gnanavel raja about ameer gnanavel raja issue

இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இருவருக்கும் பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தே பிரச்சனை இருக்கும் நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமீர் பற்றி திருடன் என கடுமையாக ஞானவேல் ராஜா விமர்சித்து பேசியதன் காரணமாக இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

ஞானவேல் இப்படி பேசியது தவறு என்று சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பாரதிராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அறிக்கையை வெளியீட்டு இருந்தார்கள். அதன் பிறகு வருத்தம் தெரிவித்து ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து இதுவரை பேசாமல் இருந்த நடிகர் கஞ்சா கருப்பு தற்போது பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஞானவேல் ராஜா சொல்வது எல்லாம் போய். பருத்திவீரன் படத்தால் நஷ்ட்டம்  அடைந்துள்ளதாக அவர் சொல்கிறார். ஆனால், எதனை வைத்து அவர் இப்படி சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. படத்தை எடுக்க முடியவில்லை என்றால் அந்த சமயமே படத்தை எடுக்க முடியவில்லை என்று கூறிவிட்டு சென்றிருக்கலாம்.அதனை ஏன் அவர் செய்யவில்லை?

படத்தை எடுக்க பாதி பணத்தையும், இடத்தையும்  கொடுத்தது சசிகுமார் தான். அதைப்போல அமீரின் அண்ணன்-தம்பிகள்,நண்பர்கள் மட்டும் பணம் கொடுத்து உதவி செய்து இருக்கின்றார்கள். அமீர் கணக்கு விஷயத்தில் ஏமாற்றி விட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தார்.  அவர் எப்படி பொய் கணக்கு காட்டப் போகிறார். படத்தை ரிலீஸ் செய்ய அமீர் படாத பாடுபட்டது எங்களுக்கு தான் தெரியும் . சிவகுமார் அமீர் அண்ணனிடம் பருத்திவீரன் படத்திற்காக கார்த்தியை ஒப்படைத்தது உண்மைதான். ஆனால், இன்றுவரை கார்த்திக்கு ஒரு பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது அந்த படம் தான்.

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

பருத்திவீரன் படம் தான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. தமிழ்நாட்டில் கார்த்தியை தெரிய வைத்தது. அந்த படத்தின் மூலம் அமீர் தான் தெரிய வைத்தார். அது என்றைக்குமே மறுக்க முடியாத உண்மை. கார்த்தியை மீண்டும் பருத்திவீரன் படம் போல ஒரு படத்தில் நடிக்க சொல்லுங்க நான் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன்.

நான் அமீர் அண்ணனின் விசுவாசி என்பதால் சூர்யா, கார்த்தி இருவரும் அவர்களின் படங்களில் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பருத்திவீரனில் நான் சிங்கிள் டேக் நடிகன். கார்த்தி 15 டேக் வாங்கினார்.  எனக்கு இன்னும் படத்தில் நடித்ததற்கு சம்பளமே கொடுக்கவில்லை. அமீர் அண்ணனை ஞானவேல், கார்த்தி, சூர்யா ஏமாத்திட்டாங்க” எனவும் கஞ்சா கருப்பு பேசியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube