சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் அஞ்சலி செலுத்த திரளும் ரசிகர்கள்.!

சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் அஞ்சலி செலுத்த திரளும் ரசிகர்கள்.!

Default Image

சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு வழி முழுவதும் ரசிகர்கள் கூட்டமாக கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை என்று காவல்துறை தெரிவித்துள்ளது .

இதனையடுத்து அவரின் உடல் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி சடங்குகள் நடைபெற்றது .இதில் ரசிகர்கள்,ஊர் பொதுமக்கள் என பலர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இறுதி ஊர்வலத்தில் சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் என பலர் கதறி அழுது கொண்டே பங்கேற்று வருகின்றனர் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையோரம் நின்று சித்ராவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இவரின் இறுதி ஊர்வலத்தில் கூட்டம் அலை மோதும் கால் போலீசார் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது .

Join our channel google news Youtube