கேரளாவில் முழு ஊரடங்கு…! அனைவருக்கும் இலவச உணவு….! – முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் முழு ஊரடங்கு…! அனைவருக்கும் இலவச உணவு….! – முதல்வர் பினராயி விஜயன்

Default Image

கேரளாவில் முழு ஊரடங்கு நாட்களில், அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் 16ஆம் தேதி வரை கேரள அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.  அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் முழு ஊரடங்கு நாட்களில் யாரும் பசியோடு இருக்க வேண்டாம். அடுத்த வாரம் முதல் அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் உள்ளூர் உணவு நிறுவனங்கள், மக்கள் உணவகங்கள் மற்றும் சமூக சமையல் அறைகளில் இருந்து உணவு தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக உணவு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube