மாணவர்கள் கவனத்திற்கு…! நாளை முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.!

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதனையடுத்து, இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகளில் 96.38% பேரும், மாணவர்களில் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

மறுகூட்டல் விவரம்:

இந்நிலையில், தங்களது மதிப்பெண்களை மறு ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் நாளை முதல் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275 எனவும் மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305 எனவும் பிற பாடங்களுக்கு ரூ.205 என்ற வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் இதனை தெரிந்துகொள்ள தேர்வு எழுதிய மையங்கள் அல்லது தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளை காலை 11 மணி தொடங்கி மே 13ம் தேதி மாலை 5 மணி வரை ஆகும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.