முன்னாள் பிரபஞ்ச அழகியை டேட்டிங் செய்யும் முன்னாள் ஐபிஎல் தலைவர் !

முன்னாள் பிரபஞ்ச அழகியை டேட்டிங் செய்யும் முன்னாள் ஐபிஎல் தலைவர் !

Default Image

முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென்னை டேட்டிங் செய்வதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது காதலித்து கொண்டிருக்கிருக்கோம் விரைவில் திருமணம் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

lalit modi

ஜூலை 14 அன்று லலித் மோடி, மாலத்தீவுகள் மற்றும் இத்தாலியின் சர்டினியாவில் சுஷ்மிதா சென்னுடன் எடுத்துக்கொண்ட விடுமுறை படங்களைப் பதிவிட்டு ‘என் சிறந்த பாதி’ என்று பகிர்ந்து கொண்டதன் மூலம் இருவரின் உறவுப் பற்றி செய்திகள் வெளிவந்தன.

மேலும், சென்னுடன் இணைந்து ஒரு ‘புதிய வாழ்க்கையை’ தொடங்குவததாக பதிவிட்டிருந்தார். அவரது பதிவின் தலைப்பில், ‘இன்னும்’ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், தற்போது ‘காதலித்து’ கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். விரைவில் கடவுளின் அருளால் ‘திருமணம்’ நடைபெறும் என அறிவித்து இருந்தார்.

Lalit Modi and Sushmita Sen

 

ஐபிஎல் சர்ச்சை வெடித்ததையடுத்து, 2010ல் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார் லலித் மோடி. சுஷ்மிதா சென் கடந்த ஆண்டு டிசம்பரில் மாடல்-நடிகர் ரோஹ்மன் ஷால்லிடமிருந்து பிரிந்ததாக இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்திருந்தார்.

இவர்கள் இருவருக்கும் எவ்வாறு காதல் ஏற்பட்டது என்று ரசிகர்களும் பிரபலங்களும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுகிறார்கள்.

Join our channel google news Youtube