கால்பந்து

‘தி கோட்’ என மறுபடியும் நிரூபித்த ரொனால்டோ! கால்பந்து உலகில் வரலாற்று சாதனை!

சென்னை : கால்பந்து உலகின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தில் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். தற்போது, அடுத்ததாக நேற்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். கால்பந்தில், 900 கோல்களை அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரொனால்டோ. இவர் கால்பந்தைத் தாண்டி பல சமூகத் தளத்திலும் சாதனையைப் படைத்துள்ளார். சமீபத்தில் இவர் தொடங்கிய தொடங்கிய யூட்யூப் சேனலும் மிக விரைவில் அதிக சப்ஸ்க்ரைபரை பெற்று சாதனை படைத்தது. […]

Christiano Ronaldo 5 Min Read
chirstiano ronaldo

20 ஆண்டில் முதல் முறையாக அதில் இடம்பெறாத மெஸ்ஸி-ரொனால்டோ! ரசிகர்கள் ஷாக்!

சென்னை : கால்பந்து உலகில் உயரிய விருதாக கருதப்படும் பாலன் டி’ஓர் விருதுபட்டியலில் முதல் முறையாக கால்பந்து ஜாமாபாவங்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால், அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கால்பந்து விளையாட்டுக்கான ரசிகர்கள் உலகம் முழுவதுமே இருந்து வருகின்றனர். எந்த ஒரு கால்பந்து தொடர் நடைபெற்றாலும் அது உலகின் பெரும்பாலான நாடுகளில் மிகவும் எதிர்பார்ப்புடனே நடைபெற்று வரும். கால்பந்து போட்டிகளுக்கு எந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே போல பாலன் டி’ஓர் […]

Ballon D'OR Award 4 Min Read
Messi - Ronaldo

கால்பந்து உலகில் புதிய”மைல்கல்”! ரொனால்டோ படைக்கப் போகும் புதிய சாதனை!

சென்னை : கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது மைல்கல் சாதனை ஒன்றைப் படைக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். இது வரையில் கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். தற்போது, ரொனால்டோ அடுத்ததாகப் படைக்கப் போகும் சாதனைக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கால் பந்து உலகத்தில் அதிகமாகச் சம்பாதிக்கும் வீரரின் முக்கியமான வீரராகப் பார்க்கப்படுவர் தான் […]

Christiano Ronaldo 6 Min Read
Christiano Ronaldo

“12 வீடியோ ..9 ஷார்ட்ஸ்”! யூட்யூப் சேனல் மூலம் ரொனால்டோ சம்பாதித்தது இவ்ளோவா?

சென்னை : கால்பந்து ஜமாபவனான ரொனால்டோ தனது யூட்யூப் சேனல் மூலம் தற்போது வரை சில நூறு மில்லியனுக்கும் அதிகமாக சம்மதித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டில் மட்டுமல்லாது சமூகவலை தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் தான் ‘கிறிஸ்டியானோ ரொனால்டோ’. இவர் 2 நாட்களுக்கு முன்பு புதிதாக “UR Ronaldo” என்ற ஒரு யூட்யூப் சேனலை தொடங்கினார். அவர் தொடங்கிய சில நிமிடங்களில் சுமார் 2.78 மில்லியன் யூடியூப் பயனர்கள் அவரது […]

Christiano Ronaldo 6 Min Read
Ronaldo Youtube Salary

ஒரு மணி நேரத்தில் 4 மில்லியன்! சாதனைப் படைத்த ‘ரொனால்டோ’ யூட்யூப் சேனல்!

சென்னை : கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்து வரும் ரொனால்டோ தற்போது டிஜிட்டல் உலகிலும் புதிய சாதனையை படைத்துள்ளார்.ரோனல் உலகில் முக்கிய மற்றும் மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர் பல முன்னணி கிளப்பிற்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் சவுதி அரேபியா கால்பந்து லீகில் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதுமே தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்ளும் விளையாட்டு வீரர்களுள் ஒருவர் […]

Christiano Ronaldo 5 Min Read

ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் …! ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார் எம்பாப்பே..!

ரியல் மாட்ரிட் : பிரான்ஸ் கால்பந்து அணியின் பிரபல இளம் கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே கடந்த 2017ம் ஆண்டு முதல் பிரபல கால்பந்து கிளப்பான பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணிக்காக விளையாடி வந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த பாரிஸ் கால்பந்து தொடரின் லீக்-1 சீசனோடு பிஎஸ்ஜி அணியில் இருந்து தான் வெளியேற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து எம்பாப்பே பிரபலமடைந்த கிளப்பான ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பிற்கு இணைய அதிக வாய்ப்பு […]

Kylian Mbappe 4 Min Read
Kylian Mbappe

இவர ‘கோட்’னு சொல்றதுல தப்பே இல்ல ..! உலக சாதனை படைத்த மெஸ்ஸி ..!

லியோனல் மெஸ்ஸி : கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்த கோபா அமெரிக்கா தொடரில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி கொலம்பியா அணியை 1-0 என வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி உலக சாதனையை படைத்திருக்கிறார். மேலும், இவர் 3 சர்வேதச கால்பந்து கோப்பைகள் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற இதே கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக […]

argentina 4 Min Read
Lionel Messi

மாஸ் காட்டிய அர்ஜென்டினா … திரில்லாக ‘சாம்பியன்’ பட்டத்தை வென்று அசத்தல் ..!

கோப்பா அமெரிக்கா : கடந்த ஜூன்-21 ம் தேதி தொடங்கிய இந்த கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதி போட்டியானது இன்று (ஜூலை-15) புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியும், கொலம்பியா அணியும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த இறுதி போட்டியில் தொடக்கத்தில் 36”வது நொடிகளில் அர்ஜென்டினா அணியின் வீரரான அல்வாரெஸ்ஸுக்கு அறிய வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அது கோலாக அமையாது. மேற்கொண்டு விளையாடிய 2 அணிகளுக்கும் அவ்வப்போது கோல் அடிக்க […]

Argentina vs Colombia 6 Min Read
Copa America 2024

யூரோ கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ‘ஸ்பெயின்’ !

யூரோ கோப்பை : கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த யூரோ கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது இன்று பெர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியின் முதல் பாதியான 45 நிமிடத்தில் எந்த அணியும் கோல் அடிக்காமல் இருந்தனர். முதல் பாதி விறுவிறுப்பாக தொடங்கினாலும், சற்று தோய்வுடனே சென்றது. அதன்பிறகு தொடங்கிய 2-ஆம் பாதியில் 2 அணிகளும் மிக தீவிரமாக […]

ESP vs ENG 4 Min Read
SPAIN IS EUROPEAN CHAMPION FOR A RECORD FOURTH TIME

கடைசி நிமித்தத்தில் வெற்றியை உறுதி செய்த இங்கிலாந்து ..! இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அபாரம்!

யூரோ கோப்பை : நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் 2-வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. யூரோ கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியானது இன்று அதிகாலை நடைபெற்றது, மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த இந்த போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதற்கு ஏற்ப சரியாக போட்டியின் 7’வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான சகா இங்கிலாந்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். […]

EURO 2024 5 Min Read
Netherland vs England, Semi Final 2 , Euro Cup 2024

கோப்பா அமெரிக்கா : கனடாவை வீழ்த்தி …2-வது முறையாக இறுதி போட்டிக்கு நுழைந்த அர்ஜென்டினா ..!

கோப்பா அமெரிக்கா : இன்று நடைபெற்ற இத்தொடரின் அரை இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என கனடா அணியை வீழ்த்தியுள்ளது. கடந்த ஜூன் 20 -ம் தேதி அன்று தொடங்கிய இந்த கோப்பா அமெரிக்கா தொடரானது தற்போது அரை இறுதியை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த அரை இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி, போட்டியின் முதல் நிமிடம் […]

Argentina vs Canada 4 Min Read
ARGvCAN , Semi Final 2 , Copa America 2024

ஃபிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி ..! 2-1 என முன்னிலை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் ..!

யூரோ கோப்பை : இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி அபாரம். கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் தொடங்கப்பட்டது.  கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கொண்ட இந்த தொடர் தற்போது அரை இறுதி போட்டி வரை எட்டியுள்ளது. இதனால், இன்று நடைபெற்ற இந்த தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியும், ஸ்பெயின் அணியும் மோதியது. எப்போதும் […]

EURO 2024 5 Min Read
Spain Vs France , Semi Final-1 , Euro cup 2024

அரை இறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா ..! பெனால்டியில் த்ரில் வெற்றி..!

கோப்பா அமெரிக்கா : இந்த ஆண்டில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில் லீக் சுற்றுக்கள் முடிவடைந்து, இன்று அடுத்த சுற்றான கால் இறுதி சுற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியாக அர்ஜென்டினா அணியும், எக்குவடோர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் அரை மணி நேரம் சற்று இரண்டு பக்கமும் கடுமையாக சென்றது. அதன்பின் போட்டியின் 35′ வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரரான லிசாண்ட்ரோ மார்டினெஸ் தன் அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். […]

argentina 5 Min Read
Argentina vs Ecuador

கோப்பா அமெரிக்கா: பராகுவேவை பந்தாடி பிரேசில் 4-1 என அபார வெற்றி..!

கோப்பா அமெரிக்கா: அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரின் இன்றைய C பிரிவில் அமைந்துள்ள அணிகளான பிரேசில் அணியும் மற்றும் பராகுவே அணியும் லாஸ் வேகாஸ்ஸில் உள்ள அல்லேஜியன்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பிரேசில் வெற்றி கண்டால் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு செல்வார்கள் என இருந்த நிலையில் இந்த போட்டியானது விறுவிறுப்பாக தொடங்கியது. சரியாக 30′ நிமிடத்தில் பிரேசில் அணிக்கு ஒரு பெனால்டி ஷூட் கிடைக்கும், ஆனால் அதை தவறவிடுவார்கள். அதனை தொடர்ந்து 35′ […]

BRA vs PAR 4 Min Read
Brazil beats Paraguay , Copa America 2024

யூரோ2024: படுதோல்வியை சந்தித்த போர்சுகள்..! 2-0 என அபார வெற்றியை பெற்ற ஜார்ஜியா..!

யூரோ2024: இந்த ஆண்டில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போர்சுகள் அணியும், ஜார்ஜியா அணியும் ஜெர்மனியில் உள்ள வெல்டின்ஸ்-அரீனா மைதானத்தில் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இந்த போட்டியின் ஆரம்பத்தில் 2-வது நிமிடத்திலே ஜார்ஜியா வீரரான குவரட்ஸ்கெலியா அற்புதமான ஒரு கோலை அடித்து அசத்தி இருப்பார். இதன் மூலம் தொடக்கத்திலே போட்டி சூடு பிடிக்க தொடங்கியது. அதன் பின் ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் போர்சுகள் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஒரு […]

Cristiano Ronaldo 4 Min Read
Georgia vs Portugal

அர்ஜென்டினா அணிக்கு 2-வது வெற்றி! காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அபாரம்!!

கோப்பா அமெரிக்கா: நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில்  இன்றைய போட்டியில் அர்ஜென்டினா அணியும், சிலி அணியும் மோதியது. இந்த ஆண்டின் கோப்பா அமெரிக்கா தொடரின் ‘A’ பிரிவில் இருக்கும் அணிகளான அர்ஜென்டினா அணியும், சிலி அணியும் இன்று காலை மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியில் 34’வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறிவிடும். அதன் பின் 3 நிமிடங்கள் கூடுதல் […]

argentina 4 Min Read
ARGvCHL , Copa America

யூரோ கோப்பை: தொடரிலிருந்து வெளியேறியது குரோஷியா! ஸ்பெயின், இத்தாலி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

யூரோ கோப்பை: இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரானது நடைபெற்று வரும் நிலையில் B பிரிவில் உள்ள ஸ்பெயின் அணியும் இத்தாலி அணியும் அடுத்த சுற்றான கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால், நட்சத்திர அணியான குரோஷியா அணி இந்த தொடரை விட்டு வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தொடரில் B பிரிவில் உள்ள அணிகளான ஸ்பெயின், இத்தாலி, குரோஷியா, மற்றும் அல்பேனியா அணிகளில் மற்ற பிரிவுகளில் ஏற்படாத ஒரு விறுவிறுப்பான போட்டிகள் இந்த பிரிவில் […]

#Italy 4 Min Read
Euro Cup , Group C

கோப்பா அமெரிக்கா 2024: அர்ஜென்டினாவுக்கு முதல் வெற்றி ..! 2-0 என கனடாவை வீழ்த்தி அபாரம்!

கோப்பா அமெரிக்கா: 2 வருடங்களுக்கு பிறகு இன்று கோப்பா அமெரிக்கா தொடரானது தொடங்கப்பட்டது, அதில் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது. இந்த ஆண்டில் இன்று தொடங்கி இருக்கும் பெரிதும் எதிர்பார்த்த கால்பந்து தொடர் தான் கோப்பா அமெரிக்கா. இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று ‘A’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது. நடைபெற இருக்கும் கோப்பா அமெரிக்கா தொடரில் நான் விளையாடுவேன் என சமீபத்தில் மெஸ்ஸி அளித்த ஒரு […]

argentina 4 Min Read
Argentina , Copa america 2024

நாளை தொடங்கும் கோப்பா அமெரிக்கா..! மெஸ்ஸி விளையாடுவாரா?

கோப்பா அமெரிக்கா: தென் அமெரிக்கா  நாடுகளுக்காக நடத்தப்படும் கால்பந்து தொடர் தான் இந்த கோப்பா அமெரிக்கா தொடர், 2 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நாளை இந்த தொடர் தொடங்கவுள்ளது. தென்னமெரிக்கா நாடுகளுக்காக நடத்தப்படும் கோப்பா அமெரிக்கா தொடரானது நாளை காலை 5.30 மணி அளவில் தொடங்கவுள்ளது. இந்த தொடரானது அமெரிக்காவில் நடைபெறுவதால் அங்கு இந்த தொடர் இன்று இரவு நடைபெறும். உலகின் அதிக நபர்களால் 3-வதாக பார்க்கப்படும் கால் பந்து தொடர் தான் இந்த கோப்பா அமெரிக்கா. […]

Argentina vs Canada 6 Min Read
Copa America 2024

கடைசி நிமிடத்தில் வெற்றியை தட்டி சென்ற போர்ச்சுகல்..! செக்கியாவை வீழ்த்தி 2-1 என த்ரில் வெற்றி ..!

யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியானது விறுவிறுப்பின் உச்சத்தில் நடைபெற்றது. யூரோ கோப்பை தொடரின் ‘F’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் போர்ச்சுகல் அணியும் செக்கியா (செக் குடியரசு தேசிய கால்பந்து அணி) அணியும் ஜெர்மனியில் உள்ள ரெட் புல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியானது, இந்த யூரோ கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்கு முதல் போட்டியாகும். இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோவிற்கு இது 6-வது யூரோ […]

EURO 2024 6 Min Read
PORvsCZE