முடி கொட்டாமல் வேகமாக வளர இந்த 6 உணவுகளை தினமும் சாப்பிட்டு வாங்க..!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வித அழகை அள்ளி தருவது இந்த முடிகள் தான். முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களின் கற்பனை சற்று மோசமானதாக இருந்தால் உங்களுக்கு அழகான முடி வேண்டும் என்றே அர்த்தம்.

முடி கொட்டுதல், வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி வளர்தல் இப்படி பலவித முடி சார்ந்த பிரச்சினைகள் உண்டு. இந்த தொகுப்பில் முடி கொட்டாமல் இருக்கவும், வேகமாக வளரவும் எந்தெந்த முக்கிய உணவுகளை தினமும் சாப்பிட்டு வர வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முட்டை
அதிக புரதசத்து நிறைந்த உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. இயற்கையாகவே இதில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். மேலும் முடி உதிர்வதையும் இது தடுக்கும். ஆதலால் தினசரி வேக வைத்த முட்டையை 1 சாப்பிட்டு வாருங்கள்.

வைட்டமின் சி
முடியின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் வகை பழங்கள் மிக முக்கியம். ஆதலால் தினமும் 1 ஆரஞ்சு, அல்லது எலுமிச்சையை ஜுஸ் போன்று தயாரித்து குடித்து வரலாம். முடியின் அதிக வளர்ச்சிக்கு இது உதவும். கூடவே முகத்தின் அழகையும் பராமரிக்கும்.

ஒமேகா 3 உணவுகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பாதாம், மீன், வால்நட்ஸ், முட்டை, பூசணி விதை போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் முடி கொட்டாமல் நன்கு வளரும். இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை.

கேரட்
தினமும் 1 கேரட் சாப்பிட்டு வந்தால் கண்ணிற்கு எப்படி நல்லதோ அதே போன்று முடியின் வளர்ச்சிக்கும் இது ஊட்டத்தை தரும். இதில் உள்ள வைட்டமின் எ முடியில் இயற்கையாகவே சுரக்க கூடிய எண்ணெய்களை உற்பத்தி செய்து சிறப்பான வளர்ச்சியை தரும்.

முளைக்கீரை
இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வருவதால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் முடி உதிர்வையும் இது தடுக்கும். எனவே, தினமும் உணவில் முளைக்கீரையை சேர்த்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிட்டும்.

முழு தானியங்கள்
அன்றாட உணவில் முழு தானியங்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பையோடின், ஜின்க், வைட்டமின் பி, புரதசத்து போன்றவை அதிக ஊட்டத்தை முடியிற்கு ஏற்படுத்தும். ஆதலால் அன்றாடம் கோதுமை, ஓட்ஸை, பார்லி போன்ற தானிய உணவுகளை சேர்த்து சாப்பிடுங்கள்.

Leave a Comment