வெள்ள தடுப்பு பணிகள் – முதல்வர் இன்று ஆய்வு…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில், வெள்ள தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதனையடுத்து, இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில், வெள்ள தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment