மீன் புட்டு தயார் செய்யும் வழிமுறைகள்.!

மீன் புட்டு தயார் செய்யும் வழிமுறைகள்.!

Default Image

சுவையான மீன் புட்டு தயார் செய்யும் வழிமுறைகள் :

மீன் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் ஒன்று ஆகும்.மீன் குழம்பு வைத்தல் போன்ற பல வழிமுறைகளை நாம் பார்த்திருப்போம்.ஆனால் சுவையான மீன் புட்டு வைப்பது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.

இந்த சுவையான மீன் புட்டு எவ்வாறு வைக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.

தேவையான பொருட்கள் :

 • அரை கிலோ மீன்.
 • ஒரு துண்டு இஞ்சி.
 • அரை கிலோ பெரிய வெங்காயம்.
 • ஐந்து பச்சை மிளகாய் .
 • ஐந்து வெள்ள பூண்டு.
 • ஒரு ஸ்பூன் சீரகம்.
 • சிறிதளவு உளுந்து ,கடுகு.
 • தேவையான அளவு உப்பு.

மீன் புட்டு செய்முறை :

 • மீனை எடுத்து நன்கு கழுவி விட்டு இட்லி தட்டில் வைத்து நன்கு வேகவைக்க வேண்டும். பின்னர் அதில் உள்ள முள்களை எடுத்துவிட்டு உதிர்த்து வைக்க வேண்டும்.
 • பின்னர் சட்டியில் எண்ணையை ஊற்றி அது கொதித்த பிறகு கடுகு ,உளுந்து ,சீரகம் முதலியவற்றை போட்டு நன்கு தாளிக்க வேண்டும்.
 • அதில் அரைத்த இஞ்சியையும் ,பூண்டையும் போட்டு வதக்க வேண்டும்.இதனை தொடர்ந்து வெங்காயம் ,மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.கொஞ்சநேரம் வதக்கிய பின்னர் உதிர்த்த மீனையும் தேவையான உப்பை சேர்த்து அதில் கலக்கவும்.
 • சிறிது நேரத்தில் மீன் நன்கு வெந்துவிடும்.இவ்வாறு செய்தால் சுவையான மீன் புட்டு தயாராகிவிடும்.
Join our channel google news Youtube