இன்று முதல் மலை ரயில் போக்குவரத்து ரத்து.!

கொரோனா வைரஸ் உலகையே அச்சுருத்தி வருகிறது.தற்போது இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தடுக்க மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில்  ஊட்டி மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மார்ச் 31 வரை ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.மேலும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் ஆகியவை மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan