அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு நிறுத்தம்.!

அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு நிறுத்தம்.!

Default Image

அம்மா உணவகங்களில் இன்று முதல் மீண்டும் மலிவு விலையில் உணவு விற்பனை என்று மாநகராட்சி அறிவிப்பு.

சென்னை அம்மா உணவகங்களில் இன்று முதல் வழக்கம்போல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது.

மழைக்காலத்தையொட்டி விலையில்லா உணவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் பழைய முறையில் அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சென்னையில் ஆய்வு செய்த போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மழைக்காலம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube