ரூபாய் 1,00,00,000 மதிப்பிலான சேதத்தை உண்டாக்கிய தீ விபத்து..!!

மேற்குவங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பாக்ரி சந்தையில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் பாக்ரி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இச்சந்தையில் இன்று காலை சுமார் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே சந்தையின் வளாகத்தினுள்ளே தங்கியிருந்த வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் சுமார் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. குறுகிய பாதை என்பதால் தீயை அணைக்கும் பணியில் சற்று சுணக்கும் ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் கொல்கத்தா காவல்துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவைச் சார்ந்த 30 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு அணைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை. இதே சந்தையில் 10 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் தீ விபத்து சுமார் 4 நாட்களாக போராடி அணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment