வீட்டில் தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் 3 சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுப்பிலிருந்து தீ மூடப்பட்டபோது வீட்டில் தீப்பிடித்ததாக முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாவட்ட மாஜிஸ்திரேட் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment