தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடப்பட்டது…!!

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடப்பட்டது…!!

Default Image

தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் இறுதி வாக்காளர் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். இந்த பட்டியலில் உள்ள விவரங்களின் படி , தமிழகத்தில் உள்ள மொத்த ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 ஆகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 472 ஆகவும் உள்ளது.

மேலும் இந்த பட்டியலின் அடிப்படையில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 ஆக உள்ளது. மொத்த மாவட்ட தொகுதிகளில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்களை கொண்டு சோழிங்கநல்லூர்அதிக வாக்காளர்கள் கொண்டுள்ளது . அதே போல  1 லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் கொண்ட சென்னை துறைமுகம் தொகுதி குறைவான வாக்காளர்கள் கொண்டதாக உள்ளது.

Join our channel google news Youtube