ஊரடங்கு உத்தரவால் ரத்தாகும் திரைப்பட விழாக்கள்!

ஊரடங்கு உத்தரவால் ரத்தாகும் திரைப்பட விழாக்கள்!

Default Image

கோவா மற்றும் சென்னை திரைப்பட விழாக்கள் உட்பட அனைத்து விழாக்களும் ரத்தமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகாய்களை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள், படப்பிடிப்புகள் மற்றும் திரைப்பட விழாக்கள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பொதுவாக, ஜூன் மாதத்தில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து முடிந்த பின்பு தான் மற்ற திரைப்பட விழாக்கள் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், கோவா மற்றும் சென்னை திரைப்பட விழாக்கள் உட்பட அனைத்து விழாக்களும் ரத்தமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Join our channel google news Youtube