சித்ராவின் மரணம் குறித்து சக நடிகை, நடிகர்களிடம் விசாரணை.!

சித்ராவின் மரணம் குறித்து சக நடிகை, நடிகர்களிடம் விசாரணை.!

Default Image

சித்ராவின் மரணம் தொடர்பாக அவருடன் பணிபுரிந்த சக கலைஞர்களிடம் தனி தனி இடங்களில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த சித்ரா இன்று அதிகாலை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் .இவரது மரணம் தொடர்பான விசாரணையை நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இவர் தனது சீரியலுக்காக ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்து விட்டு நள்ளிரவு 2 மணியளவில் தான் கணவரான ஹேமந்துடன் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வந்துள்ளனர் . அதனையடுத்து தான் குளிக்க செல்வதாக கூறி அறையிலிருந்து ஹேமந்தை வெளியேற்றிய பின்னர்,வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்த போது பட்டு புடவையில் தூக்கில் தொங்கியப்படி கண்டதாக ஹேமந்திடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது .

இதனிடையே சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்தது சந்தேகத்தை அதிகரித்துள்ளது .எனவே நசரத்பேட்டை போலீசார் பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் சித்ராவுடன் நடித்த சின்னத்திரை நடிகர், நடிகைகளிடம் தனி தனி இடங்களில் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சித்ராவின் மறைவு அவருடன் பணிபுரிந்த சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Join our channel google news Youtube

உங்களுக்காக