உலக நாடுகளை கதறவிட்ட ‘ரேன்சம்வேர்’ வைரசை கைது செய்த இளைஞரை திடீரேன கைது செய்தது FBI…!

உலக நாடுகளை கதறவிட்ட ‘ரேன்சம்வேர்’ வைரசை கைது செய்த இளைஞரை திடீரேன கைது செய்தது FBI…!

Default Image

வானாகிரை ரேன்சம்வேர்: இந்தப்பெயர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக நாடுகளையே நடுங்க வைத்த ஒரு பெயராக இருந்து வந்தது.

அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, தென்கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய, வளைகுடா நாடுகள் என 150க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 3 லட்சம் கணிணிகளை இந்த வைரஸ் தாக்கியது.

வானாகிரை வைரசை பரவவிட்டவர்கள் குறிப்பிட்ட கணிணியை முடக்கி அதிலுள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்துவிடுவர், முடக்கப்பட்ட தகவல்களை மீண்டும் தரவேண்டும் எனில் குறிப்பிட்ட தொகையை பிட்காயின்கள் மூலமாக செலுத்தினால் மட்டுமே மீண்டும் கிடைக்கும், இல்லையென்றால் அத்தகவல்கள் தானாகவே அழிந்துவிடும்.

ஹேக்கர்களின் இந்த செயலால் உலகம் முழுவதும் 29,000 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. மால்வேர் வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வழிமுறையை பிரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் வல்லுநர் மார்கஸ் ஹர்சின்ஸ் என்ற 23 வயது இளைஞர் ஒருவர் கண்டறிந்தார்.

வானகிரை மால்வேரை செயலிழக்கச் செய்யும் கில் ஸ்விட்சை (kill Switch) கண்டறிந்து வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட செய்த பெருமை இவரையே சாரும்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் மாகானத்தில் நடைபெற்ற ஹேக்கர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்ட மார்கஸ் ஹர்சின்ஸ் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2014 – 2015ம் ஆண்டு காலகட்டத்தில் மால்வேர் ஒன்றை பரவவிட்ட காரணத்திற்காக மார்கஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube