நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம்! விவசாய சங்கங்கள் அறிவிப்பு

Farmers Protest: இந்தியா முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்கள் பஞ்சாப் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனிடையில் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தடையை மீறி டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர். தடையை மீறும் விவசாயிகளை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

Read More – பாஜக தேர்தல் நிதி! ரூ.2000 நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி

கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பில், ”மார்ச் 10ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். அதே போல டெல்லியில் போராட்டம் நடத்தும் முடிவில் இருந்தும் பின்வாங்கப் போவதில்லை. மார்ச் 6ஆம் தேதி பேருந்து, ரயில், விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment